நம்பிக்கையை காப்பற்றிய பாரிஸ்டோ... வீடியோ கேமை போன்று விளையாடிய ஷாசன்க் சிங்; அபார வெற்றி பெற்றது பஞ்சாப் !! 1
நம்பிக்கையை காப்பற்றிய பாரிஸ்டோ… வீடியோ கேமை போன்று விளையாடிய ஷாசன்க் சிங்; அபார வெற்றி பெற்றது பஞ்சாப் !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 42வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சால்ட் 75 ரன்களும், சுனில் நரைன் 71 ரன்களும் எடுத்தனர்.

நம்பிக்கையை காப்பற்றிய பாரிஸ்டோ... வீடியோ கேமை போன்று விளையாடிய ஷாசன்க் சிங்; அபார வெற்றி பெற்றது பஞ்சாப் !! 2

இதன்பின் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிரடியான துவக்கம் கொடுத்த பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். அடுத்ததாக களத்திற்கு வந்த ரீலே ருசோவ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

நம்பிக்கையை காப்பற்றிய பாரிஸ்டோ... வீடியோ கேமை போன்று விளையாடிய ஷாசன்க் சிங்; அபார வெற்றி பெற்றது பஞ்சாப் !! 3

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜானி பாரிஸ்டோ – ஷாசன்க் சிங் ஜோடி கொல்கத்தாவின் பந்துவீச்சை சிதறடித்து அசுரவேகத்தில் ரன்னும் குவித்தது. கடந்த போட்டிகளில் சொதப்பினாலும் இந்த போட்டியிலும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாரிஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்தார். பாரிஸ்டோ – ஷாசன்க் சிங்கின் அதிரடி பேட்டிங்கின் மூலம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களுக்கு 52 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

நம்பிக்கையை காப்பற்றிய பாரிஸ்டோ... வீடியோ கேமை போன்று விளையாடிய ஷாசன்க் சிங்; அபார வெற்றி பெற்றது பஞ்சாப் !! 4

24 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்றாலும் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து செல்ல விரும்பாத பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி நாயகனான ஷாசன்க் சிங் சிக்ஸர் மழை பொழிந்தார். ஷாசன்க் சிங் 28 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 68* ரன்களும், பாரிஸ்டோ 48 பந்துகளில் 108* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாறும் படைத்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *