சிக்ஸர் அடிப்பதில் நான் கில்லிடா; மிகப்பெரும் உலக சாதனை படைத்த அயர்லாந்து வீரர்
அயர்லாந்தின் ஆல்ரவுண்டர் கெவினோ பிரையன் இன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரே ஆண்டில், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் என்ற சாதனையைச் சமன் செய்தார் கெவினோ பிரையன்.
இன்று ஓமன் அணிக்கு எதிராக உலகக்கோப்பை டி20 தகுதிச்சுற்றுக்குக் களமிறங்கும் போது கெவினோ பிரையன் 34 சிக்சர்களுடன் இருந்தார்.

இந்த இன்னிங்சில் கெவினோ பிரையன் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அயர்லாந்து ஸ்கோரை 183 ரன்களுக்கு உயர்த்தினார். இந்த இன்னிங்சில் ஓமனின் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் அபாரமான சிக்சரை அடித்த போது 35வது சிக்சரை இந்த ஆண்டில் எடுத்து நியூஸிலாந்து அதிரடி வீரர் கொலின் மன்ரோவின் சாதனையை சமன் செய்தார்.
ஓமன் அணியை அயர்லாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.