இந்தியா அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஜூலை 27ம் தேதி நடந்தது. ஐந்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து கேப்டன் விராத் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிரடியாக ஆடினார்கள். பவுண்டரி சிக்ஸர்களாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். 45 ரன்களில் 74 ரன்கள் விளாசி கெவின் ஓ பிரையன் பந்தில் அவுட் ஆனார்.

அதன் பின் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரோஹித் சர்மா 97 ரன்கள் எடுத்த நிலையில் துரதிஷ்ட வசமாக சேஸ் பந்தில் அடிக்க முயற்சித்து க்ளீன் போல்டு ஆனார். இதனால் தனது 3வது சதத்தை நழுவவிட்டார்.
இதில் இந்திய அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தனர். எதிர்பார்த்ததை போல் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் தோள்பட்டை வலியால் வாதிப்பட்டு வந்த கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இது குறித்து கோலி கூறுகையில், இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதே நிலை இனி வரும் போட்டிகளிலும் தொடர முயற்சிக்க வேண்டும். தவான் மற்றும் ரோஹித் இருவரும் அற்புதமாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது.
மேலும், ஸ்பின்னர்கள் வழக்கம் போல் நன்கு பந்து வீசி வெற்றியை மேலும் எளிதாக்கினார்கள். ஸ்பின்னர் ஜோடி குலதீப் சஹால் இருவரும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இது ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு பெற்ற வெற்றி என கோலி கூறினார்.