இந்திய அணியின் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். தற்போது இந்திய அணியில் இடம் இல்லாம் அணிக்கு வெளியே ரஞ்சி போன்ற உள்ளூர் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடைசியாக இந்திய அணிக்கு விளையாகி தற்போது வரை 5 வருடங்கள் ஆகிறது.
ரஞ்சிக் கோப்பையில் பரோட அணிக்காக அடி வரும் இர்ஃபான் பதான், அந்த அணிக்கு பல வருடங்களாக கேப்டனாக இருந்து வருகிறார். இந்த வருடமும் ரஞ்சிக் கோப்பைத் தொடருக்கு இர்ஃபான் பதான் பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்ப்டார். மேலும், துணைக் கேப்டனாக தீபக் ஹூடா நியமிக்க்ப்பட்டார்.
தற்போது ரஞ்சிக் கோப்பையின் லீக் சுற்றில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இர்ஃபான் பதான் கேப்டன் பொருப்பில் இருந்து நீக்கப்பட்டு தீபக் ஹூட கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியில் இருந்து நீக்கப்பட்டார் இர்ஃபான் பதான்.
இவரது தலைமையிலான பரோடா அணி, மத்தியப் பிரதேச அணியுடனான முதல் போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும், ஆந்திராவுடனான இரண்டாவது போட்டியில் லீட் கொடுத்து தோல்வி அடைந்து புள்ளிகளையும் இழந்தது. மேலும், சி பிரிவின் ஏழு அணிகளில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது பரொடா அணி.
திடீரென மூன்றாவது போட்டியில் இருந்து உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அணியில் இருந்து நீக்கப்பட்டார் இர்ஃபான். இது ஏன் என திக்கு தெரியாமல் உள்ளார் இர்ஃபான் பதான். இது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது,
என் உடல் தகுதி பற்றி எந்த பிரச்சனையும் இல்லை, நான் நல்ல உடல் தகுதியுடன் தான் உள்ளேன். மேலும், கிட்டத்தட்ட நன்றாக விளையாடி வருகிறேன். ஒழுங்கீனமாக ஏதும் நான் செய்யவில்லை. ஆனால், ஏன் என்னை அணியில் இருந்து நீக்கினார்கள் என தெரியவில்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். இது என்னை ஒரு போதும் பாதிக்கப்போவதில்லை.
இர்ஃபான் பதானுடன் அவரது அண்ணன் யூசஃப் பதானும் பரோடா அணிக்காக தான் விளையாடி வருகிறார். மேலும், அவர் தற்போது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவராலும் அணியில் விளையாட இயலாது.
தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தீபக் ஹூடா இர்ஃபான் பதான் இல்லாத வேலைகளில் அணிய வழிநடத்தியுள்ளார். தற்போது நாலை நடக்கவுள்ள திரிபுராவிற்கு எதிரான போட்டியில் விளையாட தயாராகியுள்ளது.
பரோடா அணி விவரம் : தீபக் ஹூடா (கேப்டன்), கேதார் தேவ்தார் (துணைக் கேப்டன்), அதித்யா வாகமோடி, வித்னு சோலங்கி, ஸ்வப்னில் சிங், மித்தேஷ் படேல், அதித் சேத், ரிஷி அரோதே, சாகர் மங்லோகர், லுக்மேன் மெரிவாலா, கேடுல் படேல், விராஜ் போஸ்லே, விஜய் ஹலால், ருதேஷ் வாகெலா