நல்ல திறமைசாலி... இந்த பையன சரியா யூஸ் பன்னிக்கங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் இர்பான் பதான் !! 1

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் முன்னேறுவதற்கு உதவிய விராட் கோலி

தற்போதைய இந்திய அணியில், ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை நிரூபித்த பல வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் சிறப்பாக பந்து வீசுவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி திகழ்ந்தார், குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தற்போது பந்துவீச்சில் அசத்தி வருகிறார் அதற்கு முக்கிய காரணம் விராட் கோலி என்று கூறலாம். அந்த அளவிற்கு மோகமத் சிராஜ் இருக்கு மிகவும் உறுதுணையாகவும் பக்கபலமாக விராட் கோலி இருந்தார்.

நல்ல திறமைசாலி... இந்த பையன சரியா யூஸ் பன்னிக்கங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் இர்பான் பதான் !! 2

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெட்டிசன்களுக்கு மீம்ஸ் மெட்டீரியலாக இருந்த முகமது சிராஜ்,இந்திய அணி நிர்வாகம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் உதவியுடன் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று தற்போதய இந்திய அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர் அவேஷ் கானுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

நல்ல திறமைசாலி... இந்த பையன சரியா யூஸ் பன்னிக்கங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் இர்பான் பதான் !! 3

இதுகுறித்து இர்பான் பதான் பேசுகையில், “ஒரு வீரர் மோசமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு அணி நிர்வாகம் மற்றும் அந்த அணியின் கேப்டன் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த செயலை சிராஜிர்க்கு விராட்கோலி செய்தார். சிராஜ் இக்கட்டான நிலையில் தவித்து வரும் பொழுது அவருக்கு உறுதுணையாக இருந்து,அவர் சிறப்பாக செயல்படுவதற்கு உதவினார். ஒவ்வொரு வீரருக்கும் தனக்கு ஆறுதலாக இருக்கும் மற்றொரு வீரர் நிச்சயம் தேவை.இதனால் விராட்கோலி செய்தது போன்று, தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவரான அவேஷ் கானுக்கு பக்க வளமாக இருக்க வேண்டும்”என்று இர்பான் பதான் பேசியிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *