புதிய காதல் சர்ச்சையில் சிக்கிய கே.எல் ராகுல் ; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 1

புதிய காதல் சர்ச்சையில் சிக்கிய கே.எல் ராகுல் ; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஆதித்யா ஷெட்டியுடன், இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபலம் என்றால் அவர்களை சுற்றி சர்ச்சைகள் எழாமல் இருக்காது இயல்பானது தான், அதிலும் குறிப்பாக ஆண் பிரபலம் என்றால் அடிக்கடி பெண்களுடன் கிசுகிசுக்களில் சிக்குவது தற்பொழுது இயல்பாகிவிட்டது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விதிவிலக்காகிவிடுவார்களா என்ன..?

விராட் கோஹ்லி, தோனி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் அனைவரு திருமணம் முடித்து விட்டு தங்களது காதல்களை தங்களது சிறப்பான ஆட்டங்களது தங்களது காதல் மனைவிக்கு சமர்பித்து அன்பை பொழிந்து வரும் நிலையில், மறுபுறத்தில் ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் வார, வாரம் ஒரு பெண்னுடன் கிசுகிசு வெளியாகும் அளவிற்கு படு பிசியாக செயல்பட்டு வருகின்றனர்.

புதிய காதல் சர்ச்சையில் சிக்கிய கே.எல் ராகுல் ; வச்சு செய்யும் நெட்டிசன்கள் !! 2

கடந்த சில வாரங்களுக்கு நடிகை நிதி அகர்வாலுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட கே.எல் ராகுல் இன்று, நடிகை அதீத் ஷெட்டியுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில் ’12 பி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ரஜினியின் ’தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் மகள் அதியா ஷெட்டி. இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார். இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

View this post on Instagram

…n i’m so good with that ?

A post shared by not akanKsha (@akansharanjankapoor) on

இதுபற்றி பாலிவுட் வட்டாரங்கள் கூறும்போது, ‘’பொதுவான நண்பர் மூலம் ராகுலும் அதியாவும் சந்தித்தனர். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின் காதலானது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். ராகுல் மற்றும் அதியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்களின் தோழி ஆகன்ஷா ரஞ்சன் கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றன. இதனையடுத்து சமூக வலைதளங்களில் வழக்கம் போல கே.எல் ராகுலை நெட்டிசன்கள் கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

இருவரும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. முன்னதாக, நடிகை நிதி அகர்வாலுடன் கிசுகிசுக்கப்பட்டார் கே.எல்.ராகுல். பின்னர் அதை மறுத்த நிதி, நாங்கள் நண்பர்கள் மட்டும்தான் என்று தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *