இனி ருத்துராஜ் கெய்க்வாட்டை நம்பி பயன் இல்லை... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 1

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த துவக்க வீரராக இஷான் கிஷனை உருவாக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்திருந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றிருந்தது.

இனி ருத்துராஜ் கெய்க்வாட்டை நம்பி பயன் இல்லை... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 2

 

ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் அனைவருக்கும் தென் ஆப்ரிக்கா தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், ரிஷப் பண்ட் தலைமையில் அதிகமான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டியிலும் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக ஐந்தாவது டி.20 போட்டி ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இனி ருத்துராஜ் கெய்க்வாட்டை நம்பி பயன் இல்லை... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 3

கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் விளையாடாததால் இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரே தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். ருத்துராஜ் கெய்க்வாட் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்டோ ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார், மற்ற போட்டிகளில் கடுமையாக சொதப்பினார். இதனால் முன்னாள் வீரர்கள் பலர் ருத்துராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஆட்டம் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் ருத்துராஜிற்கான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல் மறுபுறம் இந்த வருட ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடியிருந்தாலும், தென் ஆப்ரிக்கா தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷனை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

இனி ருத்துராஜ் கெய்க்வாட்டை நம்பி பயன் இல்லை... இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஜாஹிர் கான் !! 4

அந்தவகையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், இஷான் கிஷனை இந்திய அணியின் அடுத்த துவக்க வீரராக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஹிர் கான் பேசுகையில், “இஷான் கிஷன் இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், இஷான் கிஷன் தரவரிசை பட்டியலிலும் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்றுள்ளது சாதரண விசயம் இல்லை. இஷான் கிஷன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தனது பங்களிப்பையும் தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார். இஷான் கிஷனை அடுத்த துவக்க வீரராக உருவாக்க வேண்டும். ரோஹித் சர்மா, கே.எல் ராகுலிற்கு அடுத்தபடியாக துவக்க வீரராக இஷான் கிஷனிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.