மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிறந்த அணி என்றாலே இரண்டு அணிகளை தான் அனைவரும் கூறுவார்கள். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று வலுவான அணியாக திகழ்ந்து வருகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஆக இருக்கிறார்கள். இந்த அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பொலார்ட், குவின்டன் டீ காக் மற்றும் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் குவித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 14 போட்டிகளில் விளையாடி 516 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தனர். தற்போது இங்கிலாந்து – இந்தியா எதிரான டி20 போட்டியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் இடம் பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பை அணி குறித்து பேசிய இஷான் கிஷன் “கடந்த மூன்றாண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் கற்றுக்கொண்டதை வார்த்தையால் சொல்ல முடியாது. இந்த அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன் என் மீது வைத்த நம்பிக்கை பெரியது” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சூரியகுமார் யாதவ் “ மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஸ்கூல் போன்றது. நான் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற இந்த அணி தான் காரணம் ” என்று கூறியிருக்கிறார்.
