அவர பார்த்து பயப்படாத... முதல் பந்திலேயே சிக்ஸர் அடி; இஷான் கிஷனிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கோலி !! 1

என்னுடைய அறிமுக போட்டியிலேயே விராட்கோலி என்னிடம் ஜாப்ரா ஆர்ச்சர்க்கு எதிராக சிக்ஸர் அடிக்கச் சொன்னார் என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி வரிசையில் உள்ளது.

பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் மோசமாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஒரே ஒரு ஆறுதலாக அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மட்டுமே திகழ்கிறார்.

அவர பார்த்து பயப்படாத... முதல் பந்திலேயே சிக்ஸர் அடி; இஷான் கிஷனிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கோலி !! 2

இஷான் கிஷன் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 81ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 54 ரங்களும் அடித்து அசத்தியுள்ளார்.

தற்பொழுது மரண பார்மில் இருக்கும் இஷான் கிஷன் 2022 ஐபிஎல் தொடருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வெல்வதற்கான வாய்ப்புள்ள வீரர் என்றும் கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டபட்டு வருகிறார்.

கோலி சொன்ன அந்த வார்த்தை எனக்கு சரினு பட்டது….

இந்த நிலையில் தன் வாழ்நாளில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி வரும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விராட் கோலி தன்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர பார்த்து பயப்படாத... முதல் பந்திலேயே சிக்ஸர் அடி; இஷான் கிஷனிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கோலி !! 3

இதுகுறித்து அவர் பேசுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான என்னுடைய முதல் டி20 போட்டியில், நானும் கேஎல் ராகுலும் துவக்க வீரராக களம் இறங்கினோம், அப்பொழுது கே எல் ராகுல் விக்கெட்டை இழந்ததால் விராட் கோலி களத்திற்குள் வந்தார், அப்பொழுதுதான் நான் என்னுடைய முதல் பந்தை எதிர் கொள்ள காத்திருந்தேன், அப்போது பந்துவீச வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்க்கு எதிராக என்னை விராட் கோலி சிக்சர் அடிக்க சொன்னார்,’அங்கு பார் அங்கு யாருமே கிடையாது இதைப் பயன்படுத்தி அவருடைய பந்தில் சிக்ஸர் அடித்து விடு’ என்று என்னிடம் விராட் கோலி கூறினார் அதற்கு நான் ம்ம் என்று தலையசைத்தேன், அப்பொழுது அவர் கூறிய அந்த வார்த்தை எனக்கு சரியாக தோன்றியது, இதன் காரணமாக முதல் பந்திலேயே விராட் கோலி கூறிய பக்கம் அதிரடியாக அடித்தேன், என்னுடைய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கை துவங்கினேன், சர்வதேச அறிமுக போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்க்கு எதிராக பவுண்டரி அடித்து மகிழ்ச்சியாக இருந்தது என்று இஷான் கிஷன் பேசியிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *