சொன்னதை செய்த ஜெய் ஷா... ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை மொத்தமாக கைவிட்ட இந்திய அணி !! 1
சொன்னதை செய்த ஜெய் ஷா… ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை மொத்தமாக கைவிட்ட இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் வீரர்களுக்கான புதிய ஊதிய பட்டியலை பிசிசிஐ., தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய பட்டியல் புதுப்பிக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடத்திற்கான ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

வழக்கம் போல் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி ஆகிய நான்கு பிரிவுகளுடனான பட்டியலை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. இதில் ஏ பிளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏ பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் 7 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும்.

சொன்னதை செய்த ஜெய் ஷா... ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை மொத்தமாக கைவிட்ட இந்திய அணி !! 2

 

அடுத்ததாக ஏ பிரிவில் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல் ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் கொடுக்கப்படும்.

மூன்று கோடி ரூபாய் ஊதியாக கொடுக்கப்படும் பி பிரிவில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சொன்னதை செய்த ஜெய் ஷா... ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை மொத்தமாக கைவிட்ட இந்திய அணி !! 3

நான்காவது பிரிவான சி பிரிவில், ரிங்கு சிங், திலக் வர்மா,ருத்துராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகூர், சிவம் துபே, ரவி பிஸ்னோய், ஜித்தேஷ், வாசிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஸ்தீப் சிங், கே.எஸ் பாரத், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஸ் கான், ராஜத் படித்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சொன்னதை செய்த ஜெய் ஷா... ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனை மொத்தமாக கைவிட்ட இந்திய அணி !! 4

ராஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ.,யின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களாக திகழ்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *