நான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறந்த பந்து வீச்சாளராக வராமல் போனதற்கு இவர்கள் அனைவரும் தான் காரணம்; இசாந்த் சர்மா அதிர்ச்சி பேட்டி!
நான் டெஸ்ட் அரங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப் பெரிய பந்து வீச்சாளராக வளராமல் போனதற்கு இவர்களெல்லாம் தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 2007-ஆம் ஆண்டு அறிமுகமான இசாந்த் சர்மா குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் பெரிதளவில் இடம்பெறாமல் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.
சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக ஆடி வரும் இவர், விரைவில் டெஸ்ட் அரங்கில் 100 டெஸ்ட் போட்டிகளை கடக்க இருக்கிறார். இத்தனை டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் பந்துவீச்சில் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளுக்கு மேலாவது எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இசாந்த் சர்மா இதுவரை 297 டெஸ்ட் விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். இவ்வளவு அனுபவம்மிக்க ஒரு வீரர் மிக குறைந்த அளவில் விக்கெட்டுகள் எடுப்பதற்கு காரணம் என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன்கள் சிலரைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் இசாந்த் சர்மா.

அண்மையில் இதுபற்றி ஒரு உரையாடலில் பேசியுள்ள இஷாந்த் கூறுகையில், “கேப்டன் என்னிடம் 20 ஓவர்களில் 40 ரன்கள்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அதைச் செய்வேன். கேப்டன்களின் பேச்சைக் கேட்டு நடப்பது ஒவ்வொரு வீரருக்கும் அவசியமானது என நான் இதுவரை கற்று வந்துள்ளேன். தோனி, விராட்கோலி போன்ற கேப்டன்கள் என்னிடம் விக்கெட்டுகளை எடுப்பதைவிட எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க வேண்டும் என பலமுறை கேட்டு இருக்கிறார்கள் நான் அதை அவர்களுக்காக செய்திருக்கிறேன். நான் ரன்களை கட்டுபடுத்தும் வேலையில் சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை எடுப்பார்கள். அதனால் எனது விக்கெட் வீழ்த்தும் ஆவ்ரேஜ் 30 க்கும் மேல் உள்ளது. ஆனால் அதைப்பற்றி ஒருபோதும் பெரிதாக எண்ணியதில்லை. கேப்டன் என்ன செய்ய சொல்கிறாரோ அதை நான் செய்வதற்காக அணியில் இருக்கிறேன். உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பத் எல்லோரை போலவும் எனக்கும் ஆசை உண்டு. அது இதுவரை நிறைவேறவில்லை என எண்ணும்போது சற்று வருத்தம் அளிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.