உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் நட்சத்திர வீரர்!!!! 1

உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக பயன்படுத்திக் கொள்ள மேலும் ஒரு வீரரை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.

2019 ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடும் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இத்தொடர் மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் நட்சத்திர வீரர்!!!! 2

ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ் காயம் ஏற்பட்டு விட்டதால் உலக கோப்பை தொடரில் அவர் குணம் அடையவில்லை என்றால் விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேலும் உலக கோப்பை தொடரின் போது ஏதேனும் வீரர்கள் காயம் பட்டுவிட்டால்  அவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ள மூன்று வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த வீரர்களை ரிசர்வ் வீரர்கள் என அழைப்பர். அந்த பட்டியலில் அம்பத்தி ராயுடு , ரிஷப் பண்ட் மற்றும் நவ்தீப் சனி ஆகிய மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர். தற்போது மேலும் ஒரு வீரரை பிசிசிஐ நிர்வாகம் இந்த பட்டியலில் இணைத்துள்ளது. அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடிவந்த மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் நட்சத்திர வீரர்!!!! 3
Generated by IJG JPEG Library

வேகப்பந்து வீச்சில் யாரேனும் ஒருவர் காயம் பட்டுவிட்டால் முதல் முன்னுரிமை அவனுக்குக் கொடுக்கப்படும் அதற்குப் பின்னரே இசாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் பிசிசிஐ நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் இளம் வீரர்களுக்கு இஷாந்த் சர்மா தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். அதுவும் அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்காக அமையும் எனவும் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் குறிப்பிட்டார்.

இஷாந்த் சர்மா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் குறிப்பாக பந்துவீச்சில் அவரது எக்கானமி ரேட் 7.95 ஆகும் இதுவரை 80 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இசாந்த் சர்மா 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *