30 வயசுக்கு அப்புறம் தான் டீம்ல இடம் கிடச்சிதுன்னு, இப்படி வெறியோடு அடிக்கிறியா சூர்யா? - என ராகுல் டிராவிட் கேட்ட கேள்விக்கு சூரியகுமார் கொடுத்த பதில்! 1

30 வயதிற்கு பிறகுதான் இந்திய அணியில் இடம் கிடைத்தது என்று இப்படி வெறித்தனமாக ஆடுகிறாயா? ராகுல் டிராவிட் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

தற்போது இந்திய டி20 அணியில் வெறித்தனமாக பேட்டிங் செய்து பல சாதனைகளை படைத்து வருபவர் சூரியகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் அடிப்பதால் இவருக்கு இந்தியாவின் 360 டிகிரி என்ற செல்லப் பெயரும் உண்டு.

சூர்யகுமார் யாதவ் 

2021ஆம் ஆண்டு அறிமுகமாகி வெறும் 45 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ், 1574 ரன்கள் அடித்துள்ளார். இதிலும் குறிப்பாக 13 அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் அடித்திருக்கிறார்.

இந்த மூன்று சதங்களும் கடந்த ஆறு மாதங்களுக்குள் அடிக்கப்பட்டவை. அனைத்தும் 200 பிளஸ் ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கப்பட்டவை.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணியுடனான மூன்றாவது டி20 போட்டியிலும் 45 பந்துகளில் சதம் விளாசினார். 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமலும் இருந்தார்.

30 வயசுக்கு அப்புறம் தான் டீம்ல இடம் கிடச்சிதுன்னு, இப்படி வெறியோடு அடிக்கிறியா சூர்யா? - என ராகுல் டிராவிட் கேட்ட கேள்விக்கு சூரியகுமார் கொடுத்த பதில்! 2

கடந்த ஆண்டு 31 டி20 போட்டிகள் விளையாடி 1164 ரன்கள் அடித்தார். 2022ல் டி20 போட்டிகளில் வேறு எந்த வீரரும் ஆயிரம் ரன்கள் அடிக்கவில்லை. 2022ல் விட்ட ஃபார்மை 2023 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 தொடரிலேயே தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் உரையாடிக் கொண்டனர். அதில் ராகுல் டிராவிட் சூரியகுமார் யாதவிடம், “30 வயதிற்கும் மேல் அணியில் இடம் கிடைத்த காரணத்தினால் இவ்வளவு அவசரமாகவும் பசியோடும் வெறித்தனமாக பேட்டிங் செய்கிறீர்களா சூர்யா?” எனக்கெட்டார்.

ராகுல் டிராவிட்டின் இந்த கேள்விக்கு பதில் கொடுத்த சூரியகுமார் யாதவ் கூறியதாவது:

“இல்லை, நான் அப்படி யோசிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடிய போதும், நான் இப்படித்தான் விளையாடினேன். நிதானமாக விளையாடுவதை விட இப்படி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவிற்கு வரும் முன் நான் மும்பை அணிக்காக விளையாடி வந்தேன். அந்த அணிக்காக விளையாடுவது எனக்கு இன்னும் பெருமிதமாக இருக்கும்.

30 வயசுக்கு அப்புறம் தான் டீம்ல இடம் கிடச்சிதுன்னு, இப்படி வெறியோடு அடிக்கிறியா சூர்யா? - என ராகுல் டிராவிட் கேட்ட கேள்விக்கு சூரியகுமார் கொடுத்த பதில்! 3

நான் எந்த அணிக்காக விளையாடினாலும் நிதானமாக விளையாடுவதை விரும்புவதில்லை. போதிய வரை ஹிட்டிங் மட்டுமே செய்வதற்கு முயற்சிப்பேன்.

இந்திய அணியில் நீண்ட காலம் இடம் கிடைக்காதது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. குறிப்பாக அணிக்குள் இடம் பிடிப்பதற்கு சில ஆண்டுகள் முன்பு இன்னும் அதிகமாக வலியை தந்தது. ஆனால் என்னிடம் நான் கூறிக் கொண்டது ஒன்று மட்டும்தான். “இந்திய அணியில் விளையாடுவதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாய். இன்னும் சில ஆண்டுகள் தான் உன்னுடைய ஆட்டத்தை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளிப்படுத்து.” என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். இந்திய அணியில் இடம் கிடைத்தும், அதிரடியை போதும் என்று எனக்கு நிறுத்த மனமில்லை. இன்னும் வேகத்துடன் இன்னும் அதிகமான முயற்சிகளை செய்து எனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.” என்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *