இந்தியன் டீம்ல விராட் கோலிக்கு இனிமே இது மட்டும்தான் வேலை; கம்பீர் பேட்டி! 1

‘கேப்டனாக இல்லை என்றால் என்ன? இதை மட்டும் செய்தால் போதும்’ என்று விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை சுற்றி தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களும் விமர்சனங்களும் நிலவி வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். லிமிட்டட் ஓவர் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள் இருந்தால் சரி வராது என, பிசிசிஐ ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை விலக்கியது. புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்தியன் டீம்ல விராட் கோலிக்கு இனிமே இது மட்டும்தான் வேலை; கம்பீர் பேட்டி! 2

இதனால் பிசிசிஐ மீது கடும் அதிருப்தியில் இருந்த விராட் கோலி, “எந்தவித ஆலோசனைகளும் இல்லாமல் என்னை நீக்கி விட்டார்கள்” என தனது பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த அவர், தென்ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த பிறகு, அதிலிருந்தும் தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனால் விவகாரம் கூடுதல் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

பிசிசிஐ விராட் கோலியை நடத்தியது சரியில்லை ல்; மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த அவரை தரக்குறைவாக நடத்தி உரிய ஆலோசனைகள் இல்லாமல் அணியின் முடிவுகளை பிசிசிஐ எடுத்து வந்தது என்று தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவை ஒருபுறமிருக்க, இந்திய அணியில் விராட் கோலி இதை மட்டும் செய்தால் போதும், எந்த ஒரு மனஉளைச்சலுக்கும் ஆளாக தேவையில்லை என்று கௌதம் கம்பீர் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்தியன் டீம்ல விராட் கோலிக்கு இனிமே இது மட்டும்தான் வேலை; கம்பீர் பேட்டி! 3

“இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு பிறப்புரிமை அல்ல. அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளும் வரை கேப்டன் பொறுப்பில் இருக்கலாம். எந்த ஒரு வீரரும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றே நினைப்பர். கேப்டனாக வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டர். ஆகையால், இனிமேல் விராட் கோலி தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்தி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். நாள் முடிவில் இந்திய அணி வெற்றி பெறுவதே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் இலக்காக இருக்கும். அதற்கான பங்களிப்பை விராட் கோலி தொடர்ந்து கொடுக்கலாம்.

கேப்டன் பொறுப்பு மட்டுமே மாற்றப்பட்டது. ஆனாலும் ஆலோசனைகளை கூறலாம் அல்லவா?, மகேந்திர சிங் தோனி போன்ற வீரர் விராட் கோலியின் கீழ் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் விராட் கோலியும் மற்றொரு வீரர் கீழே ஆடுவதில் தவறென்ன?. இந்த விஷயத்தை மேலும் மேலும் பேசி சர்ச்சையை கிளப்ப வேண்டாம். அமைதியாக நடந்து கொள்வதே அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவதற்கு சமம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *