லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் நிச்சயம் ஹர்திக் பாண்டியா தான் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா திகழ்ந்தாலும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு பின் நிச்சயம் இந்திய அணி வேறொரு கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதற்கான முன்னேற்பாடாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனித்து வருகின்றனர். அனைவருடைய பார்வையும் இவர்களில் ஒருவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார்கள் என்றிருந்தது.ஆனால் யாருமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கேப்டன் ஹர்திக் பாண்டியா…
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த முறையில் குஜராத் அணியை வழிநடத்தி, வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
ஏன் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை லிமிடெட் ஒரு போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க கூடாது..? என்று அனைவரும் யோசிக்கும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது.
இதனால் பலரும் ஹர்திக் பாண்டியாவை லிமிடெட் ஓவர் போட்டிகளின் கேப்டானக இந்திய அணி நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் வீரர் மனோஜ் திவாரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பண்டியாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதில்,“லிமிடெட் ஓவர் போட்டிகளில் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று இந்திய அணி விவாதித்தால் அதற்கான பதில் ஹர்திக் பாண்டியா தான், அவருடைய கேப்டன் ஷிப் மிகவும் அருமையாக உள்ளது அவருடைய நடவடிக்கையை பார்த்து ஆச்சர்ய படுகிறேன் என்று மனோஜ் திவாரி அதில் தெரிவித்திருந்தார்.