உண்மையில் ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆனது? நேற்றைய போட்டியில் வெளிப்படையாக கூறிய ரோகித் சர்மா!
இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறதே துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட இருக்கிறது 4 டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இவை அனைத்தும் நடக்க இருக்கிறது

இதற்கான மூன்று விதமான அணியும் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து அன்னைக்கும் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே மூன்று விதமான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் ரோஹித் சர்மாவின் பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை
இதன் காரணமாக ஷாக் ஆன ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்ன காரணம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டனர் இதற்கு ரவிசாஸ்திரி ரோகித் சர்மாவிற்கு காயம் அடைந்து இருக்கிறது அந்த காயம் அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று தான் அவரை வெளியே வைத்திருக்கிறோம் என்பது போல் கூறியிருந்தார்

மேலும் ரோகித் சர்மாவும் தனக்கு காயம் அதை நிரூபிக்கும் வகையில் நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடவில்லை இந்நிலையில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களத்திற்கு திரும்பினார் ரோஹித் சர்மா மேலும் போட்டிக்கு முன்பாக தனது காயம் குறித்தும் பேசி இருந்தார்
அவர் கூறுகையில்…. நான் மீண்டும் வந்து கிரிக்கெட் ஆடுவதை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் அந்த காயம் மிகவும் நன்றாக இருக்கிறது சொல்லப்போனால் அது சரியாகி விட்டது என்று தான் கூறுகிறேன் என்று பேசியிருந்தார் ரோஹித் சர்மா
இந்தியா டி 20 ஐ அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட். ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி
இந்தியா ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, மாயங்க் அகர்வால் , ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட். ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்
இந்தியா டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட். ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மொஹமட். சிராஜ்