இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த விராட் கோலி, சக வீரராக மாற சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.மேலும் இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.

வெறும் மூன்றே மாதங்களில் விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றம் குறித்து உலகின் பல்வேறு பிரபல்யமான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் விராட் கோலி கேப்டன்ஷிப் குறித்துப் பேசியுள்ளார்.

அதில்,ஒரு கேப்டனாக அணியை வழி நடத்தி விட்டு அதே அணியில் ஒரு சக வீரராக பயணிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான், மீண்டும் விராட்கோலி பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில கால அவகாசம் தேவைப்படும், இதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த நான் கேப்டன் பதவியிலிருந்து விலகி விட்டு அதே அணியில் சக வீரராக பயணித்த பொழுது சற்று கடினமாகத்தான் இருந்தது, ஆனால் போகப்போக அது பழகிவிட்டது. அதேபோன்று விராட் கோலிக்கும் இது நடக்க சில காலம் தேவைப்படும், ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தற்பொழுதும் விராட்கோலி இந்திய அணிக்கு அறிவுரைகளை வழங்கலாம் என்று தினேஷ் கார்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.