டீமில் இருந்த வீரரை வெளியே விட்டு, இத்தனை கோடி ரூபாய்க்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று புலம்பி இருக்கிறார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓனர்.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இதில் சுமார் 900க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
அனைத்து அணிகளும் பங்கேற்ற இந்த ஏலத்தில் பல்வேறு அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஐபிஎல் வரலாறு காணாத வகையில், சாம் கர்ரன் 18.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாம் கர்ரனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 7.20 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டார். ஒரு சீசன் மட்டும் அங்கே விளையாடிய அவர், அடுத்த இரண்டு சீசன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று இத்தனை கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் மீண்டும் எடுக்கப்பட்டு இருக்கிறார். 18.5 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓனர் பேசுகையில்,
“எங்கள் அணியில் இருந்த சாம் கர்ரனை வெளியில் விட்டு மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். தற்போது அவரை மீண்டும் எடுத்ததில் மகிழ்ச்சி. சரியான வீரரை குறிவைத்து எடுத்திருக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர். உலகின் எந்த அணியிலும் பிளேயிங் லெவனில் கட்டாயம் இருக்கக்கூடியவர். அவரைப் போன்ற வீரர் மிடில் ஆர்டரில் இருந்தால் அணி முழுமை அடைந்ததாக இருக்கும்.
எங்களிடம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருக்கிறார்கள். மிடில் ஆர்டரில் சாம்கர்ரன் போன்ற வீரர் இருப்பதால் தற்போது மிகச் சரியாக இருக்கும்.” என்றார்.
🗣️🗣️ “He’s one of the best all-rounders”@PunjabKingsIPL Director, Ness Wadia, speaks on the record purchase of @CurranSM in the #TATAIPLAuction 2023 💰👌@TataCompanies pic.twitter.com/Liqa5xOWi9
— IndianPremierLeague (@IPL) December 23, 2022