டீமுக்கு இன்னொரு ஹர்திக் பாண்டியா கிடைச்சாச்சு.. இப்படி ஆடுவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல - ராகுல் டிராவிட் பேட்டி! 1

ஹர்திக் பாண்டியா-வை மட்டுமே நம்பி இருந்த நமக்கு அவரைப் போன்று இன்னொருவர் கிடைத்துவிட்டார் என இளம் வீரருக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் ராகுல் டிராவிட்.

இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி கடந்த 5ம் தேதி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் அடித்தது.

டீமுக்கு இன்னொரு ஹர்திக் பாண்டியா கிடைச்சாச்சு.. இப்படி ஆடுவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல - ராகுல் டிராவிட் பேட்டி! 2

 

ஒரு கட்டத்தில் 180 ரன்கள் கூட வராது என நினைத்திருந்தபோது, இந்திய அணியின் இளம் வேகம் பந்துவீச்சாளர்களின் சொதப்பலான பந்துவீச்சால் 200 ரன்களை கடந்துவிட்டனர்.

இந்த கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 57 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெடுகளை இழந்து தடுமாறி வந்தது.

6வது விக்கெட்டுக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நூறு ரன்களுக்கு மேல் எடுத்துச் செல்ல உதவினர். ஆறாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி.

டீமுக்கு இன்னொரு ஹர்திக் பாண்டியா கிடைச்சாச்சு.. இப்படி ஆடுவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல - ராகுல் டிராவிட் பேட்டி! 3

துரதிஷ்டவசமாக 51 ரன்களுக்கு முக்கியமான நேரத்தில் ஆட்டம் இழந்தார் சூரியகுமார் யாதவ். இறுதிவரை போராடிய அக்சர் பட்டேல் கடைசி ஓவரில் 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார்.

இவர்கள் இருவருக்கும் பிறகு யாரும் எதிர்பாராத விதமாக இளம் வீரர் சிவம் மாவி 15 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். கடைசியாக பதினாறு ரன்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இருப்பினும் போட்டி முடிந்த பிறகு சிவம் மாவி விளையாட விதத்தை பாராட்டி ஹர்திக் பாண்டியா உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

“வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் முழுக்க முழுக்க இந்திய அணி ஹர்திக் பாண்டியா-வை மட்டுமே நம்பி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் இளம் வீரர் சிவம் மாவி இன்றைய போட்டியில் விளையாடியது மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. பவுலிங்கில் கடந்த போட்டியில் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை பார்த்தோம். இன்றைய போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

டீமுக்கு இன்னொரு ஹர்திக் பாண்டியா கிடைச்சாச்சு.. இப்படி ஆடுவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல - ராகுல் டிராவிட் பேட்டி! 4

இனி அவரது பேட்டிங்கில் நன்றாக கவனம் செலுத்தி விளையாட வேண்டும். மேன்மேலும் பல உயர்ங்களுக்கு அவர் உயர்வதற்கு இது உதவும். அண்டர்19 காலத்தில் இருந்தே சிவம் மாவியை பார்த்து வருகிறேன். அத்துனை தகுதிகளும் இருக்கின்றன. என பெருமிதமாக பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *