விராட்கோலிக்கு பிசிசிஐ செஞ்ச தப்பு, இப்போ பிசிசிஐ-க்கு ஆப்பாக மாறிவிட்டது; பாக்., முன்னாள் வீரர் கருத்து! 1

விராத் கோலி விஷயத்தில் பிசிசிஐ செய்த தவறு, தற்போது பிசிசிஐக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, பிசிசிஐ அவர் மீது கால் புணர்ச்சி உடன் நடந்து கொள்கிறது என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதற்கு ஏற்றார்போல, அவரை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கியது. அந்த பொறுப்பு ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.

விராட்கோலிக்கு பிசிசிஐ செஞ்ச தப்பு, இப்போ பிசிசிஐ-க்கு ஆப்பாக மாறிவிட்டது; பாக்., முன்னாள் வீரர் கருத்து! 2

லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பு முற்றிலுமாக மாற்றம் பெற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி நீடித்து வந்தார். அதன்பிறகும் விராட் கோலிக்கு பிசிசிஐ தொடர்ந்து மறைமுகமாக குடைச்சல் கொடுத்து வந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். தற்போது மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் எந்தவித பொறுப்பு வகிக்காமல், வீரராக விளையாடி வருகிறார்.

விராட்கோலிக்கு பிசிசிஐ செஞ்ச தப்பு, இப்போ பிசிசிஐ-க்கு ஆப்பாக மாறிவிட்டது; பாக்., முன்னாள் வீரர் கருத்து! 3

கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தாலும் அவரது கேப்டன் பொறுப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது.

பிசிசிஐ எடுத்த இந்த முடிவு பிசிசிஐக்கு பெருத்த அடியாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரசித் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

விராட்கோலிக்கு பிசிசிஐ செஞ்ச தப்பு, இப்போ பிசிசிஐ-க்கு ஆப்பாக மாறிவிட்டது; பாக்., முன்னாள் வீரர் கருத்து! 4

“இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார். வேலைப்பளு காரணமாக டி20 போட்டிகளில் இருந்து மட்டுமே அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். இப்படி இருக்க, ஒருநாள் போட்டிகளிலும் அவரை நீக்கினால் வீரரை மனதளவில் பாதிக்கும் என்று பிசிசிஐக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

ஆனாலும் திட்டம் என்ற பெயரில் கேப்டன்ஷிப் மாற்றம் என பிசிசிஐ எடுத்த முடிவால், தற்போது பிசிசிஐ க்கு அது தலைவலியாக மாறியிருக்கிறது. விராட் கோலி மனதளவில் அழுத்தத்திற்கு உண்டாகி இருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர் விலகி இருக்கக் கூடும்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் ஆணிவேர் போல இருந்த அவரை எதற்காக இப்படி  பிசிசிஐ நடத்தியது. எது எப்படி இருப்பினும், இறுதியில் இழப்பு பிசிசிஐக்கு தான்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *