தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் உங்களுக்கு கம்பேக்னு ஒன்னே கிடையாது.. ; புஜாரா குறித்து வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர் !! 1
தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் உங்களுக்கு கம்பேக்னு ஒன்னே கிடையாது.. ; புஜாரா குறித்து வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர்..

புஜாராவிற்கு மீண்டும் இந்திய அணி இடம் கிடைப்பது என்பது நடக்காத காரியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

 

மிக மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட புஜாரா, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் பிரமாதமாக விளையாடி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் உங்களுக்கு கம்பேக்னு ஒன்னே கிடையாது.. ; புஜாரா குறித்து வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர் !! 2

ஆனால் இவரால் எதிர்பார்த்து அளவிற்கு இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த இன்னிங்ஸில் அடித்து விடுவார் அடுத்த வின்னிங்சில் அடுத்த விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்தது.இதனால் புஜரா ஒட்டுமொத்தமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

என்னதான் புஜாரா அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் இவருக்கு இருப்பதால் இவரை மீண்டும் இந்திய அணி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் இவருக்கு ஆதரவாக பேசினாலும், பெரும்பாலான முன்னால் வீரர்கள் இவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என்று தங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் உங்களுக்கு கம்பேக்னு ஒன்னே கிடையாது.. ; புஜாரா குறித்து வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்., டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பேசுகையில்.,“என்னை பொருத்தவரையில் மீண்டும் இந்திய அணியின் குஜரா விளையாடுவது என்பது மிகவும் கடினம். தற்போதைய இந்திய அணி இளம் வீரர்களுக்கும் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் பெரும்பாலானவர்கள் இளம் வீரர்களாகவே இருப்பார்கள்.குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிவிடுவார், அதேபோன்று ரிஷப் பண்டும் அணிக்கு திரும்புவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அதேபோன்று தற்போதைய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் புஜாராவின் கம்பேக் என்பது மிகவும் கடினம்” என்று வாசிம் ஜாஃபர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *