வாஷிங்டன் சுந்தர் இல்லை,இதுக்கு மேலயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தா அது நியாயமே கிடையாது ; தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 1
வாஷிங்டன் சுந்தர் இல்லை,இதுக்கு மேலயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தா அது நியாயமே கிடையாது ; தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் ..

வளர்ந்து வரும் தமிழக வீரரான பாபா இந்திரஜித் திறமையை தேர்வு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச இந்திய அணியில் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.28 வயதாகும் பாபா இந்திரஜித் ரஞ்சி டிராபி, துலிப் டிராபி போன்ற அடுத்தடுத்து முக்கியமான உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், சர்வதேச இந்திய அணியில் இடம்பெறாததால் அதிருப்தியில் உள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் இல்லை,இதுக்கு மேலயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தா அது நியாயமே கிடையாது ; தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 2

இதனால் விரக்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாபா இந்திரஜித்., இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் தன்னுடைய பெயர் இந்திய அணியில் இடம் பெறாததால் அதிருப்தியில் உள்ளேன் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்

இதுகுறித்து இந்திரஜித் பேசுகையில், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன், ஆனால் இன்னும் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, மீண்டும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெற்று விடுவேன் என நினைத்தபோதெல்லாம் எனக்கு வெறும் ஏமாற்றமே அமைந்துள்ளது., என்னுடைய பெயர் ஏன் இந்திய அணியில் இடம் பெற என்பதற்கான காரணமும் எனக்கு தெரியவில்லை” என்று தன்னுடைய மன வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்

வாஷிங்டன் சுந்தர் இல்லை,இதுக்கு மேலயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தா அது நியாயமே கிடையாது ; தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 3

பாபா இந்திரஜித்தின் இந்த உருக்கமான பேட்டியை பார்த்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அவருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித்தின் திறமையை தேர்வு குழு கவனத்தில் கொண்டு வாய்ப்பளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் இல்லை,இதுக்கு மேலயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தா அது நியாயமே கிடையாது ; தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 4

இது குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவிக்கையில், “தேர்வுக்குழு பாபா இந்திரஜித்தின் திறமை மற்றும் பெர்ஃபார்மன்ஸை பார்த்து அவருக்கான வாய்ப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர் தன்னுடைய திறமையை அதிகமாகவே நிருபித்துள்ளார். அவரை புறக்கணிப்பதில் எந்த ஒரு நியாயமும் கிடையாது, குறைந்தபட்சம் அவரை இந்திய-A போட்டிலாவது விளையாடவைக்க வேண்டும்” என்று இந்திய அணியின் தேர்வாளர்கள் குழுவுக்கு தினேஷ் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *