வீட்டை பார்த்து ஆறு மாசம் ஆகுது ! இது மாதிரி ஒரு வருடத்தை பார்த்ததே இல்லை ! வேதனையில் ஜேசன் ஹோல்டர் ! 1

வீட்டை பார்த்து ஆறு மாசம் ஆகுது ! இது மாதிரி ஒரு வருடத்தை பார்த்ததே இல்லை ! வேதனையில் ஜேசன் ஹோல்டர் !

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மிகப்பெரிய மோசமான ஆண்டு என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் கிரிக்கெட்டை பொறுத்த வரை பல்வேறு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஐபிஎல் தொடரில் 4 மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட பல்வேறு தொடர்கள் கைவிடப்பட்டு இருக்கிறது.

வீட்டை பார்த்து ஆறு மாசம் ஆகுது ! இது மாதிரி ஒரு வருடத்தை பார்த்ததே இல்லை ! வேதனையில் ஜேசன் ஹோல்டர் ! 2

இதன் காரணமாக பல்வேறு விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் தற்போது பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல்தான் நடைபெற்று வருகிறது. ஒருவேளை கிரிக்கெட் போட்டிகள் இரு நாடுகளுக்கிடையே நடத்தப்பட்டால் உயிர் பாதுகாப்பு வலையம் என்ற தனிமை வளையத்தில் தான் வீரர்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சமீபத்தில் கூறியதை பார்த்திருப்போம்.

வீட்டை பார்த்து ஆறு மாசம் ஆகுது ! இது மாதிரி ஒரு வருடத்தை பார்த்ததே இல்லை ! வேதனையில் ஜேசன் ஹோல்டர் ! 3

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு உடனடியாக தற்போது இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நியூசிலாந்திற்கும் சென்று தற்போது விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். டி20 கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. அதே போன்று டெஸ்ட் தொடரையும் 0-2 என இழந்தது.

வீட்டை பார்த்து ஆறு மாசம் ஆகுது ! இது மாதிரி ஒரு வருடத்தை பார்த்ததே இல்லை ! வேதனையில் ஜேசன் ஹோல்டர் ! 4

இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘இது மிகவும் கடினமான வருடம். இது அணிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் கடினமானது என்பது தெரியும். தற்போது ஆறு மாதமாக வீட்டிற்குச் செல்லவில்லை. நான்-ஸ்டாப்பாக சென்று கொண்டிருக்கிறேன். எங்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து பெற வேண்டும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *