நல்ல வேல இப்பயே அடி வாங்கிட்டோம்... எங்களுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இது தான்; வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் !! 1
நல்ல வேல இப்பயே அடி வாங்கிட்டோம்… எங்களுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இது தான்; வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் எடுத்தார்.

நல்ல வேல இப்பயே அடி வாங்கிட்டோம்... எங்களுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இது தான்; வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் !! 2

இதன்பின் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் நம்பிக்கை நாயகனான ஜாஸ் பட்லர், முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை தனி ஆளாக போராடி 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், தோல்வியடைந்திருந்தாலும் வெற்றிக்காக கடுமையாக போராடியது மகிழ்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நல்ல வேல இப்பயே அடி வாங்கிட்டோம்... எங்களுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இது தான்; வேதனையை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் !! 3

இது குறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேசுகையில், “கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெள்ளிப்படுத்தினார். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திப்போம் என நாங்கள் நினைக்கவே இல்லை. ஜாஸ் பட்லர் தேவைக்கு ஏற்ப ரன் குவித்ததோடு, தனது விக்கெட்டை இழக்காமலும் பார்த்து கொண்டார். எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தோல்வியை மறந்துவிட்டு கடந்து செல்வது தான் சரியானது. நல்வாய்ப்பாக எங்களுக்கு இந்த தோல்வி இப்போதே கிடைத்துவிட்டது, முக்கியமான போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தால் மிக கடினமாக இருந்திருக்கும். சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலைமதிக்க முடியாத சொத்தை போன்றவர். அவரால் எப்படிப்பட்ட போட்டியையும் மாற்றி கொடுக்க முடியும். பந்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன், ஜாஸ் பட்லர் போன்ற ஒருவர் களத்தில் இருக்கும் போது கடைசி ஓவரை வீசுவது மிக மிக கடினம். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வது மிக அவசியம். நாங்கள் செய்த தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்து கொள்வோம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், எங்கள் வீரர்கள் கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *