இவரின் பேட்டிங் வேற லெவல்ல இருக்கும்; ஷுப்மன் கில்லின் வியக்க வைத்த வீரர் யார் தெரியுமா..? 1

இவரின் பேட்டிங் வேற லெவல்ல இருக்கும்; ஷுப்மன் கில்லின் வியக்க வைத்த வீரர் யார் தெரியுமா..?

அந்த்ரே ரஸல் ஆட்டத்தை பார்க்கும்போது ஹைலைட்ஸ் போன்று இருந்தது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸல் விளையாடி வருகிறார்.

கடந்த 2019 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெரும்பாலான போட்டிகளில் அதிரடி ஆட்டம் மூலம் தனி நபராக போட்டியை வெற்றி பெற வைத்தார். இவருடன் இளம் வீரரான ஷுப்மான் கில்லும் விளையாடினார்.

இவரின் பேட்டிங் வேற லெவல்ல இருக்கும்; ஷுப்மன் கில்லின் வியக்க வைத்த வீரர் யார் தெரியுமா..? 2

இவரிடம் அந்த்ரே ரஸல் உடன் இணைந்து பேட்டிங் செய்யும்போது கிடைத்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கூற முடியுமா? என்று கொல்கத்தா நைட் ரைடஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கேட்டிருந்தது.

அதற்கு ஷுப்மான் கில் ‘‘மறுமுனையில் இருந்து அந்த்ரே ரஸல் அதிரடியை பார்க்கும்போது, டி.வி.யில் ஹைலைட்ஸ் பார்ப்பது போன்று இருந்தது’’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த்ரே ரஸல் 14 போட்டிகளில் 510 ரன்கள் விளாசினார். இதில் 52 சிக்சர்கள், 31 பவுண்டரிகள் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 40 பந்தில் 80 ரன்களும், ஆர்.சி.பி.-க்கு எதிராக 13 பந்தில் 48 ரன்களும் விளாசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *