உலகக்கோப்பையை இப்போ நடத்தி பிரச்சினையை பெருசாக்காதீங்க – கருத்து தெரிவத்த பாக்., வீரர்! கண்டுக்காமல் இருக்கும் ஐசிசி!
அக்டொபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பையை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது சரியாக இருக்குமா? என கருத்தினை தெரிவித்துள்ளார் பாக்., அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.
7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18-ந் தேதி துவங்கி நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தொடரானது தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது. டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து வருகிற 10-ந் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போர்டு (ஐசிசி) நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

Former Pakistan cricketer Wasim Akram has begun his coaching tenure with the Sri Lankan cricket team. / AFP / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
இந்நிலையில், இதுகுறித்து முன்னதாக பாக்., அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“ரசிகர்களை அனுமதிக்காமல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்கிற முடிவிற்கு ஐசிசி வருவது தவறான யோசனை. ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்த முடியும். உலக கோப்பை போட்டி என்றாலே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கூடுவதற்காக நடத்தப்படுவது. உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக வருவார்கள்.
ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி நடந்தால் இதுபோன்ற உற்சாகமான சூழ்நிலையை கொண்டு வர முடியாது. எனவே உலக கோப்பை போட்டியை நடத்த சரியான நேரத்துக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் காத்து இருந்து முடிவு எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கொரோனா தாக்கம் தணிந்து விட்டால் கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்மால் முறையாக உலக கோப்பை போட்டியை நடத்த முடியும்.” என்றார்.