இநியாவின் இடது கை சுழற்ப்பந்து வித்தைக்காரர் ஜடேஜா அவ்வப்போது சில சாதனைகளை செய்து வருகிறார். அவ்வைகையில் ஒன்று தான் தற்போதைய அவரது சாதனை.
மிக வேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இடது கை பவுளர்கள் பட்டியளில் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார் அவர். இந்த சாதனையை வெரும் 32 டெஸ்ட் போட்டிகளில் செய்து முடித்துள்ளார் ஜடேஜா. இதற்கு முன்னர் இந்த சாதனையை தன் கை வசம் வைத்திருந்தார் அஸ்திரேலியாவின் இடது கை புயல் வேக பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஜான்சன். அவர் இந்த சாதனையை 34 டெஸ்ட் போட்டிகளில் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சாதனையை தகர்த்து தற்போது ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். அஷ்வின் 29 டெஸ்ட்களில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
மிக வேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இடது கை பவுளர்கள் பட்டியல் கீழே :
- இந்தியாவின் ரவிந்த்ர ஜடேஜா – 32 டெஸ்ட் போட்டிகள்
- ஆஸ்திரேலியாவின் மிட்ச்செல் ஜான்சன் -34 டெஸ்ட் போட்டிகள்
- ஆஸ்திரேலியாவின் பில் ஜான்ஸ்டன் – 35 டெஸ்ட் போட்டிகள்
- ஆஸ்திரேலியாவின் ஆலன் டேவிட்சன் – 37 டெஸ்ட் போட்டிகள்
குஜராத்தை சேர்ந்த இவர் முழு பெயர் ரவிந்த்ரசிங் அனிருத்சிங் ஜடேஜா என்பதே ஆகும். இவருடைய தந்தை ஒரு விவசாயி ஆவார். அவருடன் தற்போது அவருடையா தாய் இல்லை. சிறு வயதிலேயே தனது தாயை இழந்தவர் ஆவார் ஜடேஜா. ஜடேஜா ஒரு சிறந்த கிரிகெட் வீரர் ஆக இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது அவருடைய தாயின் கனவாகும். அவருடைய தாய்ன் ஆசையை போன்றே தற்பொது மிக சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் ஐசிசியின் டெஸ்ட் பவுளர்களுக்கான தர வரிசை பட்டியளில் அஷ்வினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இலங்கைய்ல் நடந்து வரும் இந்திய இலங்கை இடையேயான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
மென்மேலும் பல சாதனைகளை படைக்க ஜடேஜாவை வாழ்த்துவோம்.