14வது ஐபிஎல் சீசன் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் ஆர்சிபி, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒவ்வொரு வெற்றி பெற்று இருக்கின்றனர். இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனவே, இந்தாண்டு கோப்பையை கைப்பற்ற வேண்டும் தீவிராமாக இருக்கிறது. ஆனால் முதல் போட்டியிலயே தோல்வி அடைந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர். இதனால் தோனியின் கேப்டன்ஷிப் கடந்த ஆண்டிலிருந்து சரியில்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராமில் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி மற்றும் தமிழக வீரர் ஜெகதீசன் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இதில் ஜெகதீசன் தோனியின் விக்கெட் கீப்பிங் கையுறையை போட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் தோனியின் மோசமான பேட்டிஙால் ஜெகதீசன் அடுத்த போட்டியில் தோனிக்கு பதிலாக விளையாடுவார் போல என்று வதந்தியை பரப்பி வருகின்றனர். ஜெகதீசன் 2020ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானர். சிஎஸ்கேவில் தோனி முன்னணி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவதால் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைவில்லை.
இருப்பினும் இவர் பேட்ஸ்மனாக 5 போட்டிகளில் விளையாடி 33 ரன்கள் மட்டும் குவித்து இருக்கிறார். 113.8 ஸ்ட்ரைக் ரேட் பெற்று இருக்கிறார். இதயைடுத்து 35 டி20 போட்டிகளில் விளையாடி 702 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
