உலகக்கோப்பையில் அசத்திய பிறகு, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்!! 1
England led by Eoin Morgan will want Jason Roy to feature in that must-win clash at Edgbaston as one more defeat can make things tough for the top-ranked of making it to the playoffs.

உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார் துவக்க வீரர் ஜேசன் ராய்.

உலக கோப்பை தொடர் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பரம எதிரிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் இம்முறை இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

உலகக்கோப்பையில் அசத்திய பிறகு, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்!! 2
LONDON, ENGLAND – JULY 14: Jason Roy of England walks off after being dismissed during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord’s Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Gareth Copley-IDI/IDI via Getty Images)

இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கு முன்பாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அயர்லாந்து அணியுடன் இங்கிலாந்து அணி மோதவிருக்கிறது. இப்போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. அதில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்த ஜேசன் ராய் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேசன் ராய் உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் ஒரு சதம், நான்கு அரைசதங்களுடன் 443 ரன்கள் குவித்தார். இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

28 வயதாகும் ஜேசன் ராய் 2014-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும், 2015-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். தற்போது வரை 84 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலகக்கோப்பையில் அசத்திய பிறகு, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்த வீரர்!! 3
England led by Eoin Morgan will want Jason Roy to feature in that must-win clash at Edgbaston as one more defeat can make things tough for the top-ranked of making it to the playoffs.

இங்கிலாந்து டெஸ்ட் அணி விவரம்

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ் (கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், சாம் குர்ரான், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, ஜாக் லீச், ஜேசன் ராய், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *