இந்த இரு வீரர்கள் தான் எங்களுக்கு கோப்பையை பெற்று தருவார்கள் - அணி நிர்வாகம் பேட்டி! 1

இந்த இரு வீரர்கள் நாங்கள் கோப்பையை வெல்ல நிச்சயம் உதவுவார்கள் என ஐபிஎல் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் தனது மைதானம் மற்றும் அணியை கட்டமைக்க ஏற்றவாறு சில புதிய வீரர்களை வாங்கியது. ஏலம் பெரும் பரபரப்புடன் முடிவுக்கு வந்தது.

இந்த இரு வீரர்கள் தான் எங்களுக்கு கோப்பையை பெற்று தருவார்கள் - அணி நிர்வாகம் பேட்டி! 2

ஏலத்திற்கு முன்பாக வர்த்தகத்தில் டெல்லி அணி பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை வாங்கியது. அடுத்ததாக, ராஜஸ்தான் அணியின் நீண்டகால வீரராக இருந்த ரஹானேவை வாங்கியது.

டெல்லி அணியின் துவக்க வீரராக இருந்துவந்த ஜேசன் ராயை ஏலத்தில் விட்டு மீண்டும் ஏலத்தில் 1.5 கோடிக்கு எடுத்தது. இது சிறந்த ஏலமாக கருதப்பட்டது. பின்னர் விண்டீஸ் வீரர் ஹெட்மயர் 7.75 கோடிக்கு எடுத்தது. இதனால் அணி சற்று பலம் மிக்கதாக காணப்படுகிறது.

இந்த இரு வீரர்கள் தான் எங்களுக்கு கோப்பையை பெற்று தருவார்கள் - அணி நிர்வாகம் பேட்டி! 3

ஏலம் முடியும் தருவாயில் இருக்கையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்டானிசை 4.8 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.

ஐபிஎல் ஏலம் முடிந்த பிறகு டெல்லி அணி நிர்வாகம் வீரர்கள் குறித்து அளித்த பெட்டியில்,

“ராய், இதற்கு முன்பு டெல்லிக்காக விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் உண்மையில் இந்திய மைதானத்திற்கு என்றவாறு வளர்ச்சியடைந்துள்ளார் என்று நாங்கள் உணர்ந்தோம். மேலும், எங்களுக்கு நல்ல அதிரடி வீரர் ஹெட்மயர் கிடைத்திருக்கிறார்.

இருவரும் இனைந்து எங்களுக்கு கோப்பையை வென்று தருவார்கள் என நம்புகிறோம். கிறிஸ் வோக்ஸ் சிறந்த பணத்திற்கு கிடைத்தது எங்களுக்கே ஆச்சர்யம். இவர்களுடன் அனுபவம் மிக்க வீரர்களான ரஹானே மற்றும் அஸ்வின் உள்ளனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி பலம் மிக்கதாக உணர்கிறோம்.”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *