தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் யார் என்பதை வெளியிட்ட பும்ரா!! 1

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்போது தனக்கு எப்போதும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் , ஜஸ்ப்ரிட் பும்ரா அவரது விளையாட்டில் முன்னேற்றம் நிறைய செய்துள்ளார். புவனேஸ்வர் குமாருடன் இணைந்து இந்திய பந்துவீச்சின்  இரட்டையர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சுவாரஸ்யமாக, அவரது சமீபத்திய உரையாடலில், பும்ரா அவரது அனைத்து நேர விருப்பமான கிரிக்கெட் வீரர் யார் என்பதை கூறி அசத்தினார்.

தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் யார் என்பதை வெளியிட்ட பும்ரா!! 2
India’s Jasprit Bumrah, second left celebrates a South African wicket during their warm up match of the ICC World Twenty20 2016 cricket tournament in Mumbai, India, Saturday, March 12, 2016. (AP Photo/Rajanish Kakade)

லிமிடெட் ஓவர்களில் சில தனிச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய பின்னர், அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற்றார். பும்ரா நிச்சயம் ஒரு நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் அனைத்து வடிவங்களிலும் இந்திய கிரிக்கெட் அணியின் வழக்கமான உறுப்பினராக உள்ளார்.

பும்ரா தனது காயத்தின் காரணமாக இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தின் லிமிடெட் ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் ஓரிரு போட்டிகளை தவறவிட்டார் . இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் சேர இளம் வீரர் கடுமையாக போராடி வருகிறார்.

தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் யார் என்பதை வெளியிட்ட பும்ரா!! 3
It was a Jasprit Bumrah delivery that hit Elgar under the grill after being pitched back of a length.

இவர் espncricinfo நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய சிறுவயது வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் அணுகுமுறை, அதன்பின் தன்னை மெருகேற்றிக்கொண்ட வரலாறு ஆடுகியவற்றை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தனது ஆல்டைம் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதையும் கூறினார்.

தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் யார் என்பதை வெளியிட்ட பும்ரா!! 4

இதில் தனக்கு எப்போதும் பிடித்தது, ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன் என்றும். வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனை எந்த ஒரு பேட்ஸ்மேனும் அழுத்தம் கொடுத்ததே இல்லை. இடது கை பேஸர் அவரது துல்லியமான மற்றும் தாக்கமான அணுகுமுறை உதவியுடன் ஆதிக்கம் செலுத்தி எளிதில் விக்கெட் வீழ்த்துவார் என்று பும்ரா குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *