நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா ஐபிஎல் தொடருக்கு மட்டும் வாங்க... மீண்டும் விலகிய பும்ராஹ்; வச்சு செய்யும் ரசிகர்கள் !! 1
நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா ஐபிஎல் தொடருக்கு மட்டும் வாங்க… மீண்டும் விலகிய பும்ராஹ்; வச்சு செய்யும் ரசிகர்கள்

காயம் காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா ஐபிஎல் தொடருக்கு மட்டும் வாங்க... மீண்டும் விலகிய பும்ராஹ்; வச்சு செய்யும் ரசிகர்கள் !! 2

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது.

இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயதேவ் உனாத்கட், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், மிக முக்கிய வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் இந்த தொடரிலும் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ், வேண்டுமென்றே சர்வதேச போட்டிகளை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறாரா என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் சில;

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரன் மாலிக், ஷர்துல் தாகூர், அக்‌ஷர் பட்டேல், ஜெயதேவ் உனாத்கட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *