சமி ஒகே! ஆனா, இந்திய அணி விக்கெட் எடுக்காததற்க்கு இவர்தான் காரணம்! பிராட் ஹாஜ் பாய்ச்சல்! 1

ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்துகளில் அவ்வளவு சிறப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பந்து வீசவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் முகமது ஷமி மிக சிறப்பாக பந்து வீசுகிறார் என்றும் இறுதிப்போட்டியில் நிச்சயமாக இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் அவர் எடுத்து வருவார் என்றும் கூறியுள்ளார்.

புதிய பந்துகளில் இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி போல் ஜஸ்பிரித் பும்ரா செயல்படவில்லை

இதுபற்றி பேசி உள்ள பிராட் ஹாக், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடிய போது இந்திய அணி பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி மிக சிறப்பாக பந்து வீசினார்கள். முகமது ஷமி 11 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இஷாந்த் ஷர்மா மிக சிறப்பாக பந்துவீசி நட்சத்திர பேட்ஸ்மேன் கான்வாய் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

சமி ஒகே! ஆனா, இந்திய அணி விக்கெட் எடுக்காததற்க்கு இவர்தான் காரணம்! பிராட் ஹாஜ் பாய்ச்சல்! 2

ஆனால் ஜஸ்பிரித் பும்ரா நினைத்தவாறு சரியாக புதிய பந்தில் செயல்படவில்லை. 11 ஓவர்கள் வீசி எந்த விக்கெட்டையும் கைப்பற்றினர் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். புதிய பந்தில் அவ்வளவு சிறப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச தவறி உள்ளார் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்

மேலும் நியூசிலாந்து அணி வீரர்கள் ஃபுல்லர் லென்த் பந்துகளை வீசினார்கள். ஆனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நியூசிலாந்து அணி வீரர்களுக்கு ஃபுல்லர் லென்த் பந்துகளை வீசவில்லை அதற்கு காரணம் நியூசிலாந்து அணி வீரர்கள் அந்த பந்துகளில் ரன் அடித்து விடுவார்கள் என்பதால் தான். எனவே இந்திய பந்துவீச்சாளர்கள் சற்று ஸ்விங் செய்து நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முயற்சித்தார்கள். அந்த முயற்சியில் ஜஸ்பிரித் பும்ரா சரியாக செயல்படவில்லை என்று அவர் கூறினார்

முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்கு எடுத்து வருவார்கள்

முகமது ஷமி மிக சிறப்பாக பந்து வீசுகிறார் என்றும் அவர் நிச்சயமாக இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்கு எடுத்து வருவார் என்றும் பிராட் ஹாக் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணியை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அடுத்தடுத்த எடுப்பார் என்று எண்ணுகிறேன். எனவே இவர்கள் இருவரும் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை அதிகப்படுத்துவார்கள் என்றும் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

சமி ஒகே! ஆனா, இந்திய அணி விக்கெட் எடுக்காததற்க்கு இவர்தான் காரணம்! பிராட் ஹாஜ் பாய்ச்சல்! 3

இந்திய அணி அதனுடைய முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. தற்பொழுது நியூசிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் தற்பொழுது நியூசிலாந்து அணி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *