அந்த பையன் இல்லாமா எப்படி ஜெயிக்க போறீங்க..? முன்னாள் இந்திய வீரர்கள் கவலை !! 1

அந்த பையன் இல்லாமா எப்படி ஜெயிக்க போறீங்க..? முன்னாள் இந்திய வீரர்கள் கவலை

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் விலகியுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அந்த பையன் இல்லாமா எப்படி ஜெயிக்க போறீங்க..? முன்னாள் இந்திய வீரர்கள் கவலை !! 2

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணியும், கடைசி டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் வெற்றி பெற்றதால் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்.,2ம் தேதி துவங்க உள்ள நிலையில், தொடர் துவங்கும் முன்பே இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக இந்திய அணியின் முக்கிய வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். பும்ராஹ்விற்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த பையன் இல்லாமா எப்படி ஜெயிக்க போறீங்க..? முன்னாள் இந்திய வீரர்கள் கவலை !! 3

பும்ராஹ் விலகியது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ரசிகர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த தவறவில்லை, அவர்களும் தங்கள் பங்கிற்கு தொடர்ந்து குறித்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த பையன் இல்லாமா எப்படி ஜெயிக்க போறீங்க..? முன்னாள் இந்திய வீரர்கள் கவலை !! 4

பும்ராஹ் விலகியது குறித்து முன்னாள் வீரரான அஜித் அகார்கர் பேசியதாவது;

12 டேஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ராஹ் அனைத்து போட்டியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ள ஜஸ்ப்ரிட் பும்ராஹ் இல்லாத இந்திய அணியை யோசித்து பார்க்க முடியவில்லை. பும்ராஹ் இல்லையென்றால் நிச்சயம் அது அணியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது பும்ராஹ் இருந்தாலும், இல்லையென்றாலும் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிச்சயம் வீழ்த்தும்” என்றார்.

இதே போன்று மேலும் பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *