இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் பிடித்தார்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:
ஜஸ்ப்ரிட் பும்ரா – 15 (இலங்கைக்கு எதிராக 2017)
கிளிண்ட் மெக்காய் – 14 (பாகிஸ்தானுக்கு எதிராக, 2009-10),
ஆந்த்ரே ஆடம்ஸ் – 14 (இந்தியாவுக்கு எதிராக, 2002-03)
மேலும், 5 மற்றும் அதற்கு குறைவான ஆட்டங்கள் கொண்ட இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் பும்ரா சொந்தக்காரர் ஆனார்.
ஆஸ்திரேலியாவின் கிளைன்ட் மெக்கே (பாகிஸ்தானுக்கு எதிராக, 2009-10), நியூசிலாந்தின் ஆந்த்ரே ஆடம்ஸ் (இந்தியாவுக்கு எதிராக, 2002-03) ஆகியோர் தலா 14 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை பும்ரா முறியடித்தார்.