பிசிசிஐ டிரெயினர் சரியில்ல... இவருக்கிட்ட தான் நல்ல இருக்கு.. பிசிசிஐ கடுப்பேற்றிய பும்ராஹ்! 1

மும்பையில் பிசிசிஐ குழுவான சிஓஏ-வால் நீக்கப்பட்ட டிரெயினரிடம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் பும்ராஹ்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்டில் 12 போட்டியில் 62 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாவது வீரராக உள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தக்கவைக்க பட்டுள்ளார். குறுகிய காலத்தில் தனது வேகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் பும்ராஹ்.

பிசிசிஐ டிரெயினர் சரியில்ல... இவருக்கிட்ட தான் நல்ல இருக்கு.. பிசிசிஐ கடுப்பேற்றிய பும்ராஹ்! 2

இந்நிலையில், கடந்த செப்., மாதம் இவரது கீழ் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்ட காயத்தினால் இந்திய அணியில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வந்தார். சொந்தமண்ணில் நடந்த தென் ஆப்ரிக்கா, வங்கதேச தொடரில் காயம் காரணமாக இவர் பங்கேற்கவில்லை.

இன்னும் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்பதால், அடுத்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இவர் சேர்க்கப்படவில்லை. தற்போது மெல்ல மெல்ல காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இவர், அடுத்த ஆண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெற தீவிர உடல்தகுதி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

பிசிசிஐ டிரெயினர் சரியில்ல... இவருக்கிட்ட தான் நல்ல இருக்கு.. பிசிசிஐ கடுப்பேற்றிய பும்ராஹ்! 3

இதற்காக, டில்லி ஐ.பி.எல். அணியின் உடற்பயிற்சி நிபுணர் ரஜினிகாந்த் சிவஞானத்தின் மேற்பார்வையில், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டார். ரஜினிகாந்த் பிசிசிஐ குழுவான சிஓஏ-வால் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ பரிந்துரை செய்தவரிடம் பயிற்சி பெறாமல் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து டில்லி அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., போட்டிகள் இல்லாத சமயத்தில் மற்ற வீரர்களுக்கு ‘டிரெய்னராக’ சிவஞானம் பணியாற்றலாம்,’’ என்றார்.

பிசிசிஐ டிரெயினர் சரியில்ல... இவருக்கிட்ட தான் நல்ல இருக்கு.. பிசிசிஐ கடுப்பேற்றிய பும்ராஹ்! 4

பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிட்ட கருத்தில், “பிசிசிஐ டிரெயினர் வேண்டும் என நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கலாம். இல்லையேல் தனிப்பட்ட முறையிலும் டிரெயினர் வைத்துக்கொள்ளலாம். இதில் மறுப்பு தெரிவிக்க எதுவும் இல்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *