வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறுகிறாரா விராட் கோஹ்லி..? முன்னாள் வீரர் புதிய கருத்து !! 1

வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறுகிறாரா விராட் கோஹ்லி..? முன்னாள் வீரர் புதிய கருத்து

புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் உலகம் முழுதும் அவர் அடிக்கும் சதங்களுமே விராட் கோலியை நம்பர் 1 பேட்ஸ்மென் என்று அறிவிக்கும். இந்நிலையில் விராட் கோலியை யூ டியூப் சேனலில் பாகிஸ்தான் லெஜண்ட் ஜாவேத் மியாண்டட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நான் அதிகம் கூற வேண்டியதில்லை, அவரது ஆட்டமே அனைத்தையும் கூறுகிறது. யார் சிறந்த பேட்ஸ்மென் என்று என்னிடம் கேட்கப்பட்ட போது நான் விராட் கோலி என்றேன்.

வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறுகிறாரா விராட் கோஹ்லி..? முன்னாள் வீரர் புதிய கருத்து !! 2

புள்ளிவிவரங்கள் கண்ணுக்குத் தெரிபவை, இது ரசிகர்களுக்கும் தெரியும். தென் ஆப்பிரிக்காவில் சரிசமமற்ற ஏற்ற இறக்க பிட்சிலும் கோலி நன்றாக ஆடினார், சதம் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டு அவர் பயப்படுகிறார் என்று ஒரு போதும் கூற முடியாது, அல்லது வேக, பவுன்ஸ் பிட்ச்களில் அவருக்கு ஆட வராது என்றும் கூற முடியாது. அல்லது அவர் ஸ்பின்னர்களை சரியாக ஆடமாட்டார் என்றும் கூறுவதற்கில்லை.

அவர் ஒரு கிளீன் ஹிட்டர், அவர் ஆடும் ஷாட்களை பாருங்கள். அவர் பேட் செய்வதைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாகும். அவரிடம் தரம் உள்ளது” என்றார் ஜாவேத் மியாண்டட்.

ஆனால் கோலி இப்போது சரியான பார்மில் இல்லை என்பது உண்மைதானே மியாண்டட்? வேகப்பந்து, ஸ்விங் ஆட்டக்களங்களில் அவரை திட்டம் போட்டு வீழ்த்துகின்றனரே மியாண்டட், அதே போல் ஸ்பின்னர்களிடமும் அவர் பவுல்டு ஆகி வருகிறாரே மியாண்டட்?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *