இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜீவன் மென்டிஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு அறிவிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இருவற்றிலும் மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஜீவன் மெண்டிஸ் 2012 மற்றும் 2015 இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடினார்.
பின் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இலங்கை அணிக்கு என்று கொடுத்த ஜீவன் மென்டிஸ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

ஜூன்-1/2010ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கிய ஜீவன் மென்டிஸ் 2019 உலக கோப்பை தொடரில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இறுதியாக விளையாடினார்.
இலங்கை அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜீவன் மென்டிஸ் 636 ரன்களை அடித்துள்ளார் அதில் ஒரு அரை சதமும் அடங்கும்,மேலும் 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் இலங்கை அணிக்காக 28 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் 207 ரன்கள் அடித்துள்ளார், மேலும் பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் முப்பத்தி எட்டு வயதாகும் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஜீவன் மென்டிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், இலங்கை அணிக்காக விளையாடிய ஒரு சிறந்த பயணமாக இருந்தது 2010 முதல் இலங்கை அணியில் பங்கேற்று விளையாடியது எனக்கு மிகப் பெரும் கௌரவமாகும், இதனால் நான் பல மதிப்புள்ள பாடங்களை கற்றுள்ளேன், மேலும் சிறந்த நினைவுகளை பெற்றுள்ளேன். இதற்கு நான் என்னுடைய பயிற்சியாளர் மற்றும் சகாக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜீவன் மென்டிஸ் தெரிவித்திருந்தார்.
ஜீவன் மென்டிஸ் ஓய்விற்குப் பின் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.