விராட் கோலி, பாபர் அசாம் கிடையாது… உலகக்கோப்பை தொடரில் அதிகமான ரன் குவிக்க போவது இவர் தான்; ஜோ ரூட் உறுதி
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. அக்டோபர் 5ம் தேதி நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
அனைத்து அணிகளுக்குமே உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது கனவு என்பதால் முன்னாள் வீரர்கள் பலரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான ஜோ ரூட், அதிகமான ரன் குவிக்க போகும் வீரர் யார் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஜோ ரூட் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியின் ஜானி பாரிஸ்டோ தான் உலகக்கோப்பை தொடரில் அதிகமான ரன் குவிப்பார் என நம்புகிறேன். பாரிஸ்டோ மிக சிறந்த வீரர், குறிப்பாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் அவர் மிக மிக சிறப்பான பேட்ஸ்மேன். அவர் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வருகிறார், எனவே மற்ற அனைத்து வீரர்களையும் விட ஜானி பாரிஸ்டோ அதிகமான ரன்கள் குவிப்பார்” என்று தெரிவித்தார்.