விராட் கோலியின் சாதனையை பறித்த ஜோ ரூட்

விண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய கேப்டன் கோலியின் சாதனையை முறியடித்தார்.

இங்கிலாந்து சென்ற விண்டீஸ் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இங்கிலாந்து அணி, 4-0 என இத்தொடரை கைப்பற்றியது.

இதில் சவுத்தாம்டனில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய கேப்டன் சாதனையை முறியடித்தார். இப்போட்டிக்கு முன் ஒருநாள் அரங்கில் 3954 ரன்கள் எடுத்திருந்த ரூட், இப்போட்டியில் சரியாக 46 ரன்கள் எடுத்து 4000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டார்.

இதன் மூலம் சர்வதேச அரங்கில் குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் ஜோ ரூட். இவர் 97 போட்டிகள் 91 இன்னிங்சில் இந்த சாதனையை எட்டிய இவர், இந்திய கேப்டன் கோலியை (96 போட்டி, 93 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளினார்.

குறைந்த இன்னிங்சில் ஒருநாள் அரங்கில் 4000 ரன்கள் எட்டிய வீரர்கள்

1. ஹசிம் ஆம்லா – 81 இன்னிங்ஸ்
2. விவ் ரிச்சர்ட்ஸ் – 88 இன்னிங்ஸ்
3. ஜோ ரூட் – 91 இன்னிங்ஸ்
4. விராட் கோலி – 93 இன்னிங்ஸ்
5. டேவிட் வார்னர் – 93 இன்னிங்ஸ்

தவிர, குறைந்த இன்னிங்சில், இம்மைல்கல்லை எட்டிய இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ரூட் முதலிடம் பிடித்தார். முன்னதாக முன்னாள் கேப்டன் கிரஹான் கூச் (110 போட்டிகள், 108 இன்னிங்ஸ்) இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.