இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்திய அணியின் நட்சத்திர கேப்டன் விராட் கோலியை விட இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தான் சிறந்தவர் என்று கூறினார்.
அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அனைத்து தொடர்களிலும் மண்ணைக் கவ்வும் என்று ட்வீட் செய்தார், அதை முறியடிக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு t20 மற்றும் டெஸ்ட் போட்டியில் வென்று சாதனை படைத்தது.

அதன்பின் தற்பொழுதுஇங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ஆச்சரியமூட்டும் வகையில் ட்வீட் செய்தார்.
இந்நிலையில் இவர் சமீபமாக விராட் கோலி மற்றும் ஜோ ரூட் சம்பந்தமான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார், இது இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Joe Root aves 70.7 v spin, Kohli 69.0 … But against off-spin specifically: Root 71.2, Kohli 53.1. !!! So @root66 is factually a better player of spin than Virat … #Fact #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) February 7, 2021
அதில் அவர் குறிப்பிட்டதாவது, விராட் கோலியின் ஆவரேஜ் 69 மற்றும் ஜோ ரூட்டின் அவரைச் 70.7 ஆகும்.ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஜோ ரூட்டின் ஆவரேஜ் 71.2 ஆனால் விராட் கோலியின் ஆவரேஜோ 53.1 தான். இதிலிருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலியை விட சிறந்தவர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார்

அதேப்போன்று எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டாம் பெஸ்சிடம் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார்.மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியது குறிப்பிடதக்கது.