கேப்டனா இருந்தும் கூட டி20ல வாய்ப்பு கிடைக்கல ; இதுதான் என் ஆசை! - கேப்டன் ரூட் 1

கேப்டனா இருந்தும் கூட டி20ல வாய்ப்பு கிடைக்கல ; இதுதான் என் ஆசை! – கேப்டன் ரூட்

இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டனான ஜோ ரூட் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். 

இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை காலை ஒன்பது 9.30 அளவில் இந்த இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

கேப்டனா இருந்தும் கூட டி20ல வாய்ப்பு கிடைக்கல ; இதுதான் என் ஆசை! - கேப்டன் ரூட் 2

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இரு அணி ரசிகர்களிடம் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடர் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று முடிவாகும்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியில் டி20, ஒருநாள் கிரிக்கெட்டுக்கென ஒரு கேப்டனும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென ஒரு கேப்டன் என இரண்டு கேப்டன்களை நியமித்துள்ளனர். இதில் ஜோ ரூட் டெஸ்ட் கேப்டனாகவும், இயோன் மோர்கன் டி20, ஒருநாள் கேப்டனாவும் இருக்கின்றனர். இதனால் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். 

கேப்டனா இருந்தும் கூட டி20ல வாய்ப்பு கிடைக்கல ; இதுதான் என் ஆசை! - கேப்டன் ரூட் 3

ஜோ ரூட் கூறுகையில் ” டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வலுவான அணியாக இருக்க வேண்டும். அந்த அணியில் நானும் இடம்பெற்று விளையாட விரும்புகிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாட விரும்புகிறேன். சில ஆண்டுகளாகவே டி20 போட்டிகளில் எனக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நான் அதிக ரன்கள் குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

கேப்டனா இருந்தும் கூட டி20ல வாய்ப்பு கிடைக்கல ; இதுதான் என் ஆசை! - கேப்டன் ரூட் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *