கோஹ்லி, ரோஹித் கிடையாது; நான் பார்த்து பயப்படும் ஒரே பேட்ஸ்மேன் இவர் தான்; ஜோஃப்ரா ஆர்சர் ஓபன் டாக் !! 1

கோஹ்லி, ரோஹித் கிடையாது; நான் பார்த்து பயப்படும் ஒரே பேட்ஸ்மேன் இவர் தான்; ஜோஃப்ரா ஆர்சர் ஓபன் டாக்

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுலுக்கு டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினம் என ஜாஃப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.

லாக்டவுனில் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் தன்னுடைய நேரத்தை வீட்டில் செலவழிக்கிறார். ஆர்சர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் இஷ் சோதியுடன் உரையாடினார்.

அதில், இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல். ராகுல்தான் விளையாடிய அனைத்து லீக்குகளிலும் டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து லெக் ஸ்பின்னரிடம் ஜாஃப்ரா ஆர்சர் கூறினார். அவர் பேசிய எபிசோடில் இருந்து ஒரு கிளிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டது.

கோஹ்லி, ரோஹித் கிடையாது; நான் பார்த்து பயப்படும் ஒரே பேட்ஸ்மேன் இவர் தான்; ஜோஃப்ரா ஆர்சர் ஓபன் டாக் !! 2

நாங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் விளையாடியபோது அவரை இரண்டு முறை சந்தித்தேன். அனேகமாக என்னைவிடச் சிறந்தவர் அவர்தான் என ஆர்சர் சோதியிடம் கூறினார்.

கே.எல். ராகுல் கடந்த ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார். 28 வயதான அவர் 14 ஆட்டங்களில் ஒரு ஆட்டமிழக்காத சதம் மற்றும் ஆறு அரைசதங்களுடன் 593 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் 13-வது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்ததை அடுத்து கே.எல். ராகுல் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *