நிறவெறித்தாக்குதல்! இங்கிலாந்து கிரிகெக்ட் வாரியத்திடம் ஜோப்ரா ஆர்ச்சர் புகார்! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடிவிட்டு அந்த நாட்டில் இடம் கிடைக்காததன் காரணமாக இங்கிலாந்து வந்து தற்போது இங்கிலாந்து அணியில் ஆடி கொண்டிருப்பவர் ஜாப்ரா ஆர்செர்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இப்படியே இருந்தா! உருப்படமாட்ட! இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரை திட்டிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட்! 1

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சிலர் அவரது நடத்தையை கேலி செய்ததுடன் இனவெறியுடன் திட்டியுள்ளனர். இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், ‘கால்பந்து வீரர் வில்பிரைட் ஜாஹா, 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் எனக்கு என்று ஒரு எல்லையை வகுத்துள்ளேன்.

எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். இன்ஸ்டாகிராமில் என்னை பற்றிய சிலரது இனவெறி பதிவுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளேன். இது சரியான முறையில் செல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்த நிகழ்வால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் மேலும் கூறுகையில், ‘நான் என்ன தவறு செய்தேன் என்பதை அறிவேன். அதற்குரிய விளைவையும் அனுபவித்து விட்டேன். நான் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்து விடவில்லை. மீண்டும் உற்சாகமான மனநிலைக்கு திரும்ப விரும்புகிறேன். தற்போது மனரீதியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிய அணியின் மருத்துவருடன் சிறிது நேரம் பேசினேன். இது போன்ற கடினமான சூழலில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி சக வீரர் பென் ஸ்டோக்சும் அறிவுரை வழங்கினார். இப்போது போட்டியில் பங்கேற்பதற்கு மனதளவில் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *