2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்; மாற்றுவீரர் யார்?! 1

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்; மாற்றுவீரர் யார்?! 2

இதே மைதானத்தில் வருகிற பிப்ரவரி 13ம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்; மாற்றுவீரர் யார்?! 3

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆர்ச்சர் காயம் லேசானதாக இருக்கிறது. இதனால் காயத்திற்கு அவர் ஊசி போட்டுக் கொண்டார். விரைவில் குணமடைந்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் அணிக்கு திரும்புவார். முழு கவனத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

2வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்; மாற்றுவீரர் யார்?! 4

முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் சிறப்பாக விளையாடியதால் அவர் தொடர்ந்து 2வது போட்டியிலும் இருப்பார் என்று தெரிகிறது. தற்போது காயம் காரணமாக விலகியிருக்கும் ஆர்ச்சருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணிக்கு திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாக பார்க்கப்படும் ஆண்டர்சன் மற்றும் பிராட் இருவரும் இணைந்து விளையாடினால் இந்திய அணிக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *