ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன் !! 1

 

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என வெறித்தனமாக தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து நடைபெற்று தற்போது முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இதனால் இந்திய அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.   

ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன் !! 2

இதையடுத்து இந்த இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று புனேவில் தொடங்கியது அதில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆர்ச்சர் குறித்து பேசினார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன் !! 3

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆர்சருக்கு வலது கையில் பலமான காயம் ஏற்பட்டது இதனால் இவர் ஒரு t20போட்டியில் பங்கு பெறவில்லை அதன்பின் இவர் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது ,அதனைத் தொடர்ந்து வந்த அடுத்த அறிக்கையில் இவர் முதல் பாதி ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இதுபற்றி கூறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் ,ஜோஃப்ரா ஆர்ச்சரின் காயம் மிக மோசமாகி விட்டது, மேலும் என்னால் அந்த காயத்தை பற்றி விவரிக்க முடியாது, அந்தக் காயம் குறித்த பரிசோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆர்ச்சரின் நிலைமை எப்பொழுது சரியாகும் என்று காலம் தான் முடிவு செய்யும், மேலும் இவர் தற்பொழுது விளையாட முடியாது என்று தெரிவித்தார், தனது உயிரைக் கொடுத்து இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரர் என்று ஜோஃப்ரா ஆர்ச்சரை புகழ்ந்த மார்கன், இங்கிலாந்து அணியின் மருத்துவ குழுவின் முடிவைப் பொறுத்து தான் ஆர்ச்சரின் 2021 ஐபிஎல் போட்டி அமையும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அந்த அணிக்கு இல்லாமல் போனது மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *