அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு தனது இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டபள்யூ.டபள்யூ.இ என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் ஜான் சீனா மிகவும் பிரபலமானவர். இவர் இதுவரை 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் மல்யுத்தத்தில் போது பிரபலமாக உபயோகிக்கும் வாக்கியம் ஆங்கிலத்தில் “you cant see me” . அதன் அர்த்தம் “உன்னால் என்னை பார்க்க முடியாது” என்பது தான். இதை உணர்த்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜான் சீனா.
அதில் விராத் கோலி தனியாக கை குலுக்குவது போலவும், அருகில் யாரும் இல்லாதது போலவும் இருந்தது. முதலில் ரசிகர்களுக்கு புரியவில்லை ஜான் சீனா என்ன சொல்ல வருகிறார் என்று. பின்னர் தான் உணர்ந்தது, “உன்னால் என்னை காண இயலாது” என்பதன் அர்த்தம் அதில் அடங்கியிருக்கிறது என்று.
ஜான் சீனா, விராத் கோலிக்கு வாழ்த்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 3 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக ஜான் ஸீனா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஜான் சீனா வாழ்த்தினை பதிவிட்டுள்ளார். இதற்க்கு முன்னர், 2016-ஆம் ஆண்டு கோலியின் படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது கோலியின் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.