ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல்-க்கு அனுப்பமாட்டோம், இங்கிலாந்து வாரியம் பிடிவாதம்... போனால் போகட்டும்.. இன்னும் மாஸான மாற்று வீரர் தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்! 1

ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காததால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அவருக்கு மாற்று வீரரை அறிவித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதற்குள் பல வீரர்கள் துரதிஷ்டவசமாக காயம் அடைந்தும், சொந்த காரணங்களுக்காகவும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இன்னும் சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே வெளியேறுகின்றனர். சிலர் இந்திய வீரர்கள் பாதி ஐபிஎல் போட்டி முடிந்த பிறகே அணியில் இணைகின்றனர்.

ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல்-க்கு அனுப்பமாட்டோம், இங்கிலாந்து வாரியம் பிடிவாதம்... போனால் போகட்டும்.. இன்னும் மாஸான மாற்று வீரர் தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்! 2

இப்படி இருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய மற்றும் அதிரடி துவக்க வீரராக பார்க்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக விலகியுள்ளார்.

கிட்டத்தட்ட எட்டுமாத காலமாக அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் இவர் விளையாடவில்லை. கடைசியாக ஜூலை மாதம் விளையாடினார். அதன் பிறகு கோல்ப் விளையாடியபோது காலில் பலமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தார்.

ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல்-க்கு அனுப்பமாட்டோம், இங்கிலாந்து வாரியம் பிடிவாதம்... போனால் போகட்டும்.. இன்னும் மாஸான மாற்று வீரர் தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்! 3

மெல்ல மெல்ல குணமடைந்து வரும் பேர்ஸ்டோவ் ஜூலை மாதம் துவங்கவுள்ள ஆசஸ் தொடருக்கு மிகமுக்கிய வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். ஆகையால் அதற்குள் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை அனுமதிக்கவில்லை.

நிலையில் இவருக்கு மாற்றுவீரரை தேடும் தீவிரப் பணியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இறங்கியது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் உள்ளூர் வீரரை குறிவை தூக்கியது.

ஜானி பேர்ஸ்டோவை ஐபிஎல்-க்கு அனுப்பமாட்டோம், இங்கிலாந்து வாரியம் பிடிவாதம்... போனால் போகட்டும்.. இன்னும் மாஸான மாற்று வீரர் தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்! 4

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகம் ஆகாமல் இருந்து வரும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த மேத்தியூ ஷாட், நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இவர் அடித்த 458 ரன்கள் கடந்த சீசனில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பந்துவீச்சில் 7.08 எக்கனாமியுடன் 11 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங் பௌலிங் இரண்டும் நன்றாக செயல்பட்டு வரும் இவரை எடுத்து இருக்கிறது பஞ்சாப் அணி நிர்வாகம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *