ஜாஸ் பட்லர்
பயமா..? எனக்கா…? இந்த இந்திய வீரர பார்த்து எனக்கு கொஞ்சம் கூட பயம் இல்ல; ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு

அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தான் தயாராகவே இருப்பதாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. 10ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி

இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி 13ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

இந்தநிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர், புவனேஷ்வர் குமார் உள்பட இந்திய அணி எந்த பந்துவீச்சாளரை பார்த்தும் தனக்கு பயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜாஸ் பட்லர்

இது குறித்து பட்லர் பேசுகையில், “எந்த தனிப்பட்ட வீரரை பார்த்தும் நான் பயந்தது கிடையாது. நான் எனது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவேன், இதுவரை எந்த தனிப்பட்ட வீரரையும் பார்த்து பயந்தது கிடையாது, அதே போல் இந்திய அணியின் புவனேஷ்வர் குமாரை பார்த்தும் நான் இப்பொழுது பயப்படவில்லை. அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நான் எனது வேலையை சரியாக செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்தையும் நான் செய்து வருகிறேன். அடிலெய்ட் மைதானம் உலகின் தலைசிறந்த மைதானங்களில் ஒன்று, அந்த மைதானத்தில் இந்தியா போன்ற வலுவான அணியை எதிர்கொள்ள உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டி நிச்சயம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும். எங்களால் முடிந்தவரை வெற்றிக்காக கடுமையாக போராடுவோம், அதற்கு தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஜாஸ் பட்லர் புவனேஷ்வர் குமாரை குறிப்பிட்டு பேசுவதற்கு காரணம், இதற்கு முன் டி.20 போட்டிகளில் மட்டும் ஜாஸ் பட்லர், புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் 5 முறை விக்கெட்டை இழந்திருப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *