சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியை கிண்டல் செய்யும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவிட்ட ட்வீட்டிற்கு ஜடேஜா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 294 ரன்களை எடுத்தது. பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
போட்டியின் வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஒரு விக்கெட்டை கைப்பற்ற மிக கடுமையாக போராடியது. கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களான ஸ்டூவர் பிராட் மற்ற்ம் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் களத்தில் இருந்தால் அவர்களின் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, ஒட்டுமொத்த பீல்டர்களையும் வட்டத்திற்குள் நிறுத்தியது. ஆஸ்திரேலிய அணி ஒட்டுமொத்த வீரர்களையும் அருகில் அருகில் நிறுத்தி பீல்டிங் செய்ய வைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியதால், தனது பங்கிற்கு தாங்களும் எதாவது இந்த புகைப்படத்தை வைத்து பதிவு போட வேண்டும் என முடிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் புகைப்படத்தோடு, ஐபிஎல் தொடரின் போது தோனிக்கு, கவுதம் கம்பீர் பீல்டிங் நிறுத்திய புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து பதிவிட்டது. தோனியை கிண்டலடிக்கும் வகையில் அமைந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
That moment when a classic move in Test cricket actually reminds you of a T20 master stroke! #Ashes #KKR #AmiKKR #AUSvENG pic.twitter.com/D3XbMu83mf
— KolkataKnightRiders (@KKRiders) January 9, 2022
தேவை இல்லாமல் தோனியை சீண்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வச்சு செய்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகனான ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் மிக சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஜடேஜாவின் இந்த ட்வீட்டும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.